Sis. Suganthi Manikandan
சுழல்காற்றில் அடிபட்டதுபோல பிரச்சனைகளால் சுழப்பட்டு
கலங்கிய இருதயத்துடன் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தேன்
“பயப்படாதே! உன்னை கண்ணின் மணியைபோல
காத்திடுவேன்” என்றார்.
சொந்த குடும்பத்தில் அன்னியளாக மாறிய வேளையில்
மனம் நொந்து கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தேன்
“உன் தகப்பனும் தாயும் உன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை” என்றார்.
நான் நேசிக்கிறவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட வேளையில்
உள்ளம் உடைந்து கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தேன்
“பயப்படாதே! விசுவாசமுள்ளவளாயிரு அப்பொழுது அவள்
இரட்சிக்கப்படுவாள்” என்றார்.
இப்பொழுது உணர்ந்தேன் என்னுடைய பிரச்சனைகள்
எவ்வளவு பெரிதாக இருந்தாலும் என் பாவங்களை, சோகங்களை, பாரங்களை, அவமானங்களை, வருத்தங்களை சந்தோஷமாக மாற்ற சிலுவை சுமந்தாரே என் நேசர்
அவர் சர்வவல்லமையுள்ளவர் – எல்ஷடாய்”
சமாதானத்தின் தேவன் – யெகோவா ஷாலோம்
சுகமளிக்கும் தேவன் – யெகோவா ராஃபா
வெற்றி தரும் தேவன் – யெகோவா நிசி.
என் நேசர் எனக்கு போதுமானவர் !
பரலோகம் வரை என்னை நடத்திடுவவார் !
அங்கு சோகமில்லை, துக்கமில்லை, பாரமில்லை, பயமில்லை, கண்ணீரில்லை !
அல்லேலூயா ! அல்லேலூயா !! அல்லேலூயா !!!