Sis. Suganthi Manikandan
சொந்தங்களுடன் கருத்து வேறுபாடு
வைராக்கியமாய் பேசாதிருந்தேன்
நண்பர்களுடன் கருத்து வேறுபாடு
வைராக்கியமாய் பேசாதிருந்தேன்
அண்டை வீட்டாருடன் பிரச்சனை
வைராக்கியமாய் பேசாதிருந்தேன்
உறவினர்களுடன் கருத்துவேறுபாடு
வைராக்கியமாய் பேசாதிருந்தேன்
விசுவாசிகளுடன் பிரச்சனை
வைராக்கியமாய் பேசாதிருந்தேன்
ஆனாலும் வேதத்தை ஒழுங்காக தியானித்தேன்
அனுதினம் அல்லும் பகலும் வேதம் வாசித்தேன்
உபவாசம் மேற்கொண்டேன், தசமபாகம் கொடுத்தேன்
ஆவிக்குரிய போதகரிடம் ஆவிக்குரிய காரியங்களை சம்பாஷித்தேன்
கொஞ்சகாலத்தில் மரணம் என்னை சந்தித்தது
பரலோகாகம் செல்வேன் என்று நம்பிக்கையோடு சென்றேன்
தேவதூதர்கள் ஜீவபுஸ்தகத்தை புரட்டி உன் பெயர் இல்லை என்றனர்
ஏன் இந்த் நிலைமை என்று கதறினேன்
மன்னிக்க மறந்தாயே மகளே(னே) என்று
ஆண்டவர் சொன்னார்
வைராக்கியம் வீணாய் போனது, சிந்தியுங்கள்
வைராக்கியம் மறந்து
எல்லோரையும் மன்னித்து விடுங்கள்
ஏனென்றால் ஏழு எழுபது முறை
மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்