Skip to content Skip to sidebar Skip to footer

விண்ணக நாயகனே !

Sis. Suganthi Manikandan

விண்ணக நாயகனே பார் போற்றும் வேந்தனே
வற்றாத அன்போடு புவி நோக்கி வந்தாயோ
உம் சாயலில் உம்மை உயர்த்த மனிதனை படைத்தாயோ
உம்மை மறந்து மனுவானவன் சிருஷ்டியை உயர்த்தினானோ

மண்ணான மனிதன் உம்மை மறந்து வழி விலகி போகையில்
மனதுருகி உம்மை அறிய வாய்ப்பளித்தாயோ
உம் அன்பை உணர இரட்சிப்பை அளித்தாயோ
இரட்சிப்பை பெற விசுவாசம் என்னும் சாவியை அளித்தாயோ

மாயையான மனிதன் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தால் சீர்கெட்டு போகையில்
இரத்தம் சிந்தி பாடுபட்டு கொல்கதா மலையில் உம்மை ஒப்புகொடுத்தாயோ
மனுக்குலத்தின் பாவம் நீங்கி மனுவானவர் ஜெயம் எடுக்க
முட்கீரிடம் சூடிக் கொண்டாயோ

புல்லுக்கு சமானமாய் இருக்கும் மனுக்குலத்தின் பாவக்கறை போக்க
விரும்பாத ரூபத்தை சொல்லொன்னா பாடுகளுடன் அடைந்தாயோ
சத்துருவை நிந்தித்து மனுவானவன் ஜெயமெடுக்க
கைகள் கால்களில் ஆணிகளால் கடாவப்பட்டாயோ
மனம்நொந்து கசிந்துருகி மனுவுக்காய் சகித்தாயோ
என் சிலுவை நாதா ஜெய கிறிஸ்துவே

சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தீரோ
மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தீரோ
நீர் மரணத்தை ஜெயித்தீர் என்று இவ்வுலகுக்கு காட்ட
இப்போது உணர்கிறேன் உம் அன்பின் ஆழத்தை
ஒப்புக்கொடுக்கிறேன்  முற்றிலுமாய் என்னை, ஜீவநாதா கிறிஸ்தேசுவே

Leave a comment